வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ரொம்பவும் பிடித்தது இதுதான்..! தீயாய் வேலை பார்த்த வம்சி..

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் ஆக்சன் திரைப்படங்களை பெரிதும் தேர்வு செய்து நடிப்பார்கள் அப்படி நடித்தால் தான் அவரது மார்க்கெட் மென்மேலும் உயரும் என்பது அவர்களது கணிப்பாக இருந்து வருகிறது இருபின்னும் ஒரு சில நடிகர்கள் அவ்வபொழுது குடும்ப செண்டிமெண்ட் மற்றும் வித்தியாசமான காமெடி கலந்த படங்களில் நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் தளபதி விஜய் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டு வந்த நிலையில் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது.  இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார். தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளார்.

வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இதுவரை இந்த படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர் மற்றும் இரண்டு சிங்கிள் பாடல்கள் வேற லெவலில் வைரலானது.  இப்படி படத்திற்கு எல்லாமே சாதகமாக இருந்தாலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு..

விஜய் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடித்துள்ளதால் இந்த படம் ஹிட் அடிக்குமா? அடிக்காதா.? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் வாரிசு படத்தை பற்றி விஜய் கூறியது.. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தாலும் அம்மா பாடல் தன்னை மிகவும் கவர்ந்து உள்ளதாக விஜய் கூறியுள்ளார்.

மேலும் வாரிசு படத்தின் கடைசி 20 நிமிடங்கள் கண்கலங்கிவிட்டாராம் அந்த அளவிற்கு கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை உருக்கும் விதமாக  எடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி முழு படத்தையும் மனம் திருப்தி உடன் நிறைவு வாரிசு படத்தில் கிடைத்துள்ளதாம் மொத்தத்தில் வாரிசு படம் வேற லெவல் இருப்பதாக கூறப்படுகிறது.