இந்த வில்லன் நடிகர் என்றால் விஜய்க்கு அப்படி பிடிக்குமாம்.! யாருப்பா அந்த நடிகர்.?

0

vijay like this villain actor in his cinema field: இளைய தளபதி விஜய் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலையாக பெற்றுக்கொண்டார் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவருடன் நடிப்பதற்கு அனைத்து நடிகர் நடிகைகள், வில்லன் நடிகர்கள், துணைக் கதாபாத்திரம் நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

இவரின் படத்தில் நடித்தால் இவர்களுக்கு பெரிய அளவு படம் வெற்றியாகும் இவர்களும் பெரிய அளவில் பேசப்படுகிறார்கள் என்பதற்காகவே அவரின் படங்களில் நடிப்பதற்கு ஆசைப்படுகின்றனர். விஜயுடன் இணைந்து பணிபுரிய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே ஆர்வம் காட்டுகின்றனர்.

விஜய் படம் என்றாலே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அதிகமாகவே இருக்கும். எப்படியும் அந்த படத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பெயர் புகழ் கிடைத்துவிடும் என போட்டி போடுவார்கள். இந்நிலையில் விஜய்க்கு தன்னுடன்  கில்லி, போக்கிரி,  வில்லு, சிவகாசி போன்ற படத்தில் நடித்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.

அவருடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு பெரிய  அளவில் வெற்றியைப் பெற்றுக் தந்தது. ஆனால் வில்லு படத்தில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் பிறகு இவர்கள் எந்தவொரு திரைப்படத்திலும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை.

பிரகாஷ்ராஜ் தனது வில்லத்தனமான நடிப்பில் காமெடி கலந்து நடித்து ரசிகர்களை பெரிய அளவில் கவர்வார் எனக்கும் விஜய்க்கும் இடையே ஆன அந்த கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கும்.  இவர்கள் இணைந்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.