ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் படும் ஜோராக இருக்கும் தளபதி விஜய்.. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட மாஸ் வீடியோ

leo
leo

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய் இவர் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். லியோ முதல் ஷூட்டிங் சென்னையில் முடிந்ததை அடுத்து தனி விமானத்தின் மூலம் 180 பேர் காஷ்மீருக்கு பறந்தனர்.

அங்கு மைனஸ் டிகிரி குளிர் என்று கூட பார்க்காமல் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.. மேலும் சர்வதேச போதை பொருளை பற்றி இந்த படம் பெரிய அளவில் எடுத்து பேசும்  என சொல்லப்படுகிறது.

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர். நடிகைகள் நடித்து வருகின்றனர். இதில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் காட்சிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளதால் மற்றபடி அனைத்து நடிகர், நடிகைகளும் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தளபதி விஜய் லேட்டஸ்டாக ஏர்போர்ட்டில் இருந்து வெளிவந்த வீடியோ ஒன்று பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது. இதை பார்த்த பலரும் விஜய் லியோ ஷூட்டிங்கில் இருக்கிறாரா..

அல்லது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர். எது எப்படியோ நடிகர் விஜய் ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் மாஸ்க் போட்டு கொண்டு செம்ம மாஸாக அவர் நடந்து வந்த புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்..