இணையதளத்தில் கசிந்த விஜயின் தளபதி 67 படத்தின் லுக்.. மிரட்டும் புகைப்படம்

0
thalapathy 67
thalapathy 67

விஜய் நடிப்பில் தெலுங்கு வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம். தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடித்து வருகிறாராம். தளபதி 67 படத்தின் சூட்டிங் ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கியதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இதுவரை படம் குறித்து எந்த ஒரு தகவலை வெளியே கசிய விடாமல் படக்குழு முன்புறமாக வேலை பார்த்து வருகிறது தளபதி 67 படத்தின் பூஜை புகைப்படங்களை கூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சைலண்டாக படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படத்தில் விஜயின் லுக் இதுதான் என கூறி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் விஜய் தளபதி 67 படப்பிடிப்பில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நடிகையும், தொகுப்பாளருமான ரம்யா தளபதி விஜயை நேரில் சந்தித்து  பரிசு பொருள் ஒன்றைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்..

ரம்யா அதை சமூகவளை தளப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் இதுதான் தளபதி 67 படத்தின் லுக்கா என கேட்டு நச்சரித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் தொகுப்பாளனி ரம்யா தளபதி விஜய் உடன் எடுத்துக் கொண்ட  லேட்டஸ்ட் புகைப்படம்..

thalapathy 67
thalapathy 67