vijay kirushnaraj directed tamil movies: தமிழ் திரை உலகில் தற்போது சீரியலில் நடித்துவரும் மிக பிரபலமான நடிகர்கள் ஒரு காலத்தில் இயக்குனர்களாக பல மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய உள்ளார்கள். பின்னர் தொடர்ந்து இயக்குனராக பணியாற்ற முடியாமல் நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் தான் விஜய் கிருஷ்ணராஜ்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்பட லிஸ்ட் இதோ..!
கண்ணேடு கண் -1982 ஆம் ஆண்டு விஜய் கிருஷ்ணராஜ் இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் தான் கண்ணேடு கண். இந்த திரைப்படத்தில் ரவிக்குமார் மற்றும் தலக்ஷனா இவர்கள் நடித்திருப்பார்கள் அதிக எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படமானது எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

சிம்மசொப்பனம் -நடிகர் திலகர் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் பிரபு மற்றும் கே ஆர் விஜயா, ராதா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது விஜய் கிருஷ்ணாவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.

திறமை -சத்யராஜ் மற்றும் ரேவதி நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஆனது 1985ஆம் ஆண்டு வெளிவந்தன. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் கிருஷ்ணராஜ்க்கு இயக்குனராக இருக்கும் திறமையே கிடையாது என பலரும் விமர்சித்தார்கள்.

வாழ்க வளர்க -பிரபல நடிகர் ராதாரவியின் திரை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆனது 1987ஆம் ஆண்டு வெளிவந்தது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவிற்கு அவருடைய பெயரை காப்பாற்றியது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா -பிரபல நடிகர் அர்ஜுன் மற்றும் நிரோஷா ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படமானது 1992 ஆம் ஆண்டு வெளிவந்தன. மேலும் இத்திரைப்படமானது சரியான கதையம்சம் இல்லாமல் இருந்தும் அர்ஜூனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக கருதப்பட்டன.

தாட் பூட் தஞ்சாவூர்-1994 ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஆனது சொல்லும் அளவிற்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்குனராக திரைப்படம் இயக்குவதையே முற்றிலும் தவிர்த்து விட்டார் பின்னர் நமது விஜய் கிருஷ்ணராஜ் சீரியல்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
