பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த விஜய்யின் மரண ஹிட் பாடலை தலைப்பாக வைத்த படக்குழு.! அதுவும் வில்லனாக இந்த முன்னணி இயக்குனராம் .?

தமிழ் சினிமாவில் மிகவும் தவிர்க்க முடியாத இயக்குனர் என்றால் கௌதம் மேனன் லிஸ்டில் இருப்பார், அந்தளவு கௌதம்மேனன் திரைப்படத்தை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள், அதேபோல் கௌதம் மேனன் திரைப்படம் என்றாலே ஹிட் அடையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன் ரிது வர்மா, நிரஞ்சனி, அகத்தியன், கௌதம் மேனன் இவர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் கௌதம் மேனன்.

சமீபகாலமாக கௌதம் மேனன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது, இந்த நிலையில் நடிகரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் கவுதம் மேனன் நடிப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது, இந்நிலையில் கௌதம் மேனன் ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் எனவும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்து வருகிறார்.

guatham menon
guatham menon

மேலும் இந்த திரைப்படத்தை வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் தான் படத்தை இயக்கி வருகிறார், எனவே படத்தின் தலைப்பு தற்போது தெரியவந்துள்ளது படத்திற்கு ‘செல்பி’ என பெயர் வைத்துள்ளார்கள், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய கத்தி திரைப்படத்தில் விஜய் சமந்தா நடித்திருந்தார்கள் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்பிபுள்ள பாடலில் இருந்துதான் இந்த திரைப்படத்திற்கான டைட்டிலை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கௌதம் மேனன் அவர்கள் அனுஷ்கா, மாதவனை வைத்து நிசப்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment