விஜய் உடன் முதன்முறையாக கைகோர்த்த பிரபல இசை அமைப்பாளர்.! அட இவரா குஷியில் கொண்டாடிய ரசிகர்கள்.!

0

தளபதி விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் 50 சதவித இருக்கைகளுடன் திரையரங்கிற்கு வந்து இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தில் விஜயுடன் இணைந்து விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா அர்ஜுன் தாஸ் கௌரி கிஷன்  சாந்தனு பாக்கியராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியானது.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் யார் தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில்.

தளபதியை இயக்கும் வாய்ப்பை நெல்சன் இயக்குனர் தட்டி தூக்கினார் அதேபோல் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.  நெல்சன் இதற்கு முன் டாக்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தை அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது அதனால் தமன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

ஏனென்றால் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக இருந்தது அப்பொழுது இசையமைப்பாளராக தமன் தான் இசையமைக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த நிலையில்  ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய தமன் நீங்கள் விஜயுடன் இணைய போகிறீர்களா என கேள்வி கேட்டு உள்ளார்கள்.

அதற்குத் தமன் ஆமாம் ஆமாம் என உறுதி செய்வது போல் பேசியுள்ளார் அது தளபதி 66 படத்திலா அல்லது தளபதி 67 திரைப்படத்திலா என தெரியவில்லை. இருந்தாலும் இந்த செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.