ஜனநாயகன் 3 மணி நேரப்படமா.? விஜய்க்கு வந்த சிக்கல்

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனநாயகன் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஓரிரு நாட்களில் படத்தை சென்சாருக்கு அனுப்பும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்ற செய்தி கசிந்து விட்டது.

இது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். பொதுவாக இரண்டரை மணி நேரம் தாண்டி படம் ஓடும் என்றால் அது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்து விடும். இப்படி வெளிவந்த பல படங்கள் வசூலில் அடி வாங்கிய கதையும் உண்டு.

அப்படி ஒரு நிலைமை ஜனநாயகன். படத்துக்கு வந்து விடுமோ என விஜய் ரசிகர்களும் அதிர்ந்து போயிருக்கின்றனர். ஏனென்றால் இது விஜயின் கடைசி படம் மட்டுமின்றி படத்தை பெரிய அளவில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற நிலையும் இருக்கிறது.

அதனால் இந்த செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சி தான். விஷயம் என்னவென்று விசாரித்து பார்த்ததில் இது வெறும் வதந்தி தான் என தெரிய வந்திருக்கிறது.

ஒரு வேளை அப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் விஜய் இதில் தலையிட்டு அரை மணி நேரம் கத்தரி போடுங்கள் என சொல்லி விடுவார். இருப்பினும் இயக்குனர் இப்போது தான் படத்தை ட்ரிம் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

எங்கெங்கு கட் செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்த பிறகுதான் சென்சருக்கு படம் போகப் போகிறது. ஆனால் அதற்குள்ளே இப்படி ஒரு வதந்தி வந்து எல்லோரையும் பதட்டப்பட வைத்திருக்கிறது.