விஜய் எப்படியோ அதே போல தான் அஜித்தும்..! பேட்டியில் உண்மையை உளறிய விஜயின் தாயார்..!

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் இருந்து சினிமாவில் போட்டிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவர்களுக்கும்  ஒவ்வொரு எதிர்விசையான நடிகர்கள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சிவாஜி கணேசன் நடித்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியாக இருந்தது எம்ஜிஆர்.

அதன் பிறகு திரை உலகில் ரஜினி கமல் ஆகிய இருவருக்குள் ஏகப்பட்ட மோதல்கள் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இன்று வரை இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் அதேபோல தற்பொழுது விஜய் அஜித் ஆகிய இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்குள் ஏகப்பட்ட போட்டிகள் நிலவி உள்ளது.

அந்த வகையில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் மற்றும் அதே போல விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தது மட்டுமில்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களுமே ஒன்றுக்கொன்று குறைபாடு இன்றி கலை கட்டி வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அம்மா பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான நிகழ்வுகளை வெளிகாட்டி உள்ளார் அதாவது அவர் கூறியது என்னவென்றால் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் டிரைலரையும் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிரைலரையும் பார்த்தேன். அதில் எனக்கு இரண்டு திரைப்படங்களும் மிகவும் பிடித்து விட்டது.

மேலும் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படத்தையும் ஒரே நாளில் பார்க்க போகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் தல அஜித்தும் எனக்கு ஒரு மகன் போன்றவர் தான் அவரை நான் பல்வேறு இடங்களில் சந்தித்துள்ளேன் அதேபோல அவருடைய மனைவி ஷாலினி எங்கள் குடும்பத்தில் ஒரு நண்பராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நான் கோயிலுக்கு சென்ற பொழுது கூட துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற வேண்டும் என உங்களிடம் வேண்டிக் கொண்டேன் என்பதை பேட்டியில் அவர் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment