விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1..! ஆதாரத்துடன் உண்மையை போட்டு உடைத்த வலிமை பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் கடைசியாக பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனால் இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்து வந்தது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சாதனை படைத்தது. தற்பொழுது தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் முடிவடைந்த நிலையில் படத்தில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார் பிரகாஷ்ராஜ் யோகிபாபு சங்கீதா என பலரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் குடும்ப பாங்கான கதையாக உருவாகியுள்ளது. அதேபோல் இதற்குமுன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் திறந்ததும் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூல் செய்தது.

அதேபோல் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது இதுவரை தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இதனை உறுதிப்படுத்தும் வகையில் விநியோகஸ்தரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் சமீபத்தில் நடைபெற்ற விக்ரம் பட இசைவெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டில் இதுவரை நம்பர் ஒன் வசூல் என்றால் அது மாஸ்டர் திரைப்படம் தான்.

என பகிரங்கமாக தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாம அன்பு செழியன் அஜித் நடிப்பில் வெளியாகிய வலிமை திரை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment