விஜய் இப்படிதான் கே ஜி எப் இயக்குனர் அதிரடி கருத்து.!

0

வாரிசு நடிகராக அறிமுகம் ஆனாலும் பல தோல்விகளை சந்தித்து பிறகு தனது முயற்சியினால் உயர்ந்தவர் நடிகர் விஜய். பொதுவாக இவர் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் வெற்றி பெற்றுவிடும்.

அந்த வகையில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இவர் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொதுவாக தளபதி விஜய்யை பிடிக்காமல் இளம் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள், முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இருக்க முடியாது அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் திகழ்கிறார்.

அந்தவகையில் இவரை பற்றி யாரிடம் கேட்டாலும் இவர் எளிமையானவர், சிறந்த மனிதர் என்று அனைவரும் கூறி பார்த்திருப்போம். அந்த வகையில் தற்பொழுது கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நில்லிடம் விஜயை பற்றி ரசிகர் ஒருவர் கேட்கும் பொழுது பவர் ஹவுஸ் என்று மாசாக பதிலளித்துள்ளார்.