ஏஜென்ட் விக்ரமோட ஸ்டூடண்ட் தான் விஜய்.! நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா.. தளபதி 67 குறித்து அனல் பறக்கும் மீம்ஸ்…

0
thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தையும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தையும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது தொடங்கிய நிலையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படம் நடிகர் விஜய்க்காக செதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய நடிகர்களை வில்லன் கதாபாத்திரத்தில் தேர்வு செய்து உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒரு வில்லனாக நடிக்கிறார் என்று அவரே கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்று ஒரு புதிய தகவல் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வாரிசு படம் வெளியான உடனே தெரிந்து விடும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் வாரிசு படம் வெளியான பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிக்கையாளர் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வீடியோவாக வெளியாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் எப்போது அப்டேட் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர் இது ஒரு பக்கம் இருக்க தளபதி 67 திரைப்படத்தில் விஜய் அவர்கள் கைதி கார்த்தி கூட ஜெயில இருந்தவர்தான் விஜய் என்றும், ஏஜென்ட் விக்ரமோட ஸ்டூடண்ட் தான் விஜய் என்றும், ரோலாக்சை விட பயங்கரமான வில்லன் தான் விஜய் என்றும், கூறிவந்தார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு புகைப்படத்தை போட்டு அந்த புகைப்படத்தில் லோகேஷின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து “நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா” என்று மீம்ஸ் போட்டு உள்ளனர். இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.