விஜய் பட இயக்குனர் முன்பு செம்ம கெத்தா போஸ் கொடுத்த அஜித்தின் தீவிர ரசிகன்.! அந்த சினிமா பிரபலம் யார் தெரியுமா.?

பிரபுதேவா நடன இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். முதலில் காதலன், மின்சார கனவு என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டார். சினிமா உலகில் நடன இயக்குனராகவும் ஹீரோவாகவும் ஓடிக்கொண்டிருந்த இவருக்கு கடைசியாக இயக்குனராக வேண்டும் என்ற கனவும் இருந்தது.

அதை வெளிகாட்டும் வகையில் தளபதி விஜயை வைத்து போக்கிரி, வில்லு என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி ஹிந்தி பக்கம் சல்மான் கான் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார் இப்படி சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி ஓடிக்கொண்டிருக்கிறார்.

இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக பிரபுதேவா இருக்கிறார். ரொம்ப காலமாக தமிழில் தொடர்ந்து படங்களில் நடிப்பதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தேள், மைடியர் பூதம் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன தற்போது கூட பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த படத்தை சந்தோஷ் பி ஜெயகுமாரி இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் பிரபுதேவா உடன் கைகோர்த்து வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, ரைசா வில்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக போய்க்கொண்டிருக்கின்றன அண்மையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது அப்பொழுது வளர்ந்து வரும் ஹீரோ ஜான் கொக்கேன் படக் குழு உடன் இருந்தார்.

இவர் அணிந்திருந்த டி-ஷர்ட் அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது காரணம் அவரது டி-ஷர்டில் அஜித்தின் புகைப்படம் இருந்தது இது குறித்து அவர் பதிலும் சொன்னது. எனது முதல் திரைப்படமான பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் செய்தியாளர்களை சந்தித்தது மகிழ்ச்சி என கூறினார் மேலும் பேசிய அவர் அஜித்தால் தான் சினிமா துறைக்கு ஈர்க்கப்பட்டேன்.

இது என்னுடைய முதல் பிரஸ் மீட் அஜித் சார் கொடுத்த ஊக்கத்தால் தான் தமிழ் திரை உலகில் தற்போது இருக்கிறேன் அதனால்தான் அஜித் சார் புகைப்படம் இருக்கும் டீ சர்ட்டை அணிந்திருந்தேன். அவருக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என கூறினார்.

poikaal kuthirai
poikaal kuthirai
john kokken
john kokken

Leave a Comment