விஜய் தனது மனைவியை மதம் மாற்றினாரா.? எஸ் ஏ சந்திரசேகர் அதிரடியாக வெளியிட்ட பூஜை அறை புகைப்படம்.!

எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகர் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார், அதேபோல் எஸ்ஏ சந்திரசேகர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதுவரை இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப் படங்களும் அடங்கும்.

40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றிவரும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை பெற்றுக் கொடுத்துள்ளது, தற்பொழுது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வளர்ந்து வரும் விஜய்யை உருவாக்கியதே சந்திரசேகர் தான், இது பலருக்கு தெரிந்த விஷயம் இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் கடைசியாக இயக்கிய திரைப்படம் கேப்மாரி, இதில் ஜெய் அதுல்யா ரவி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதனால் விஜய் சமீப காலமாக மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என பெரும் சர்ச்சை எழுந்தது, இந்தநிலையில் சந்திரசேகர் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்தார், அந்தப் பேட்டியில் விஜய்யை கடுமையாக நிறைய பேர் விமர்சித்துள்ளார்கள் நடிகர் விஜய் மதமாற்றும் ஏஜென்டாக இருக்கிறார் என கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார் தொகுப்பாளர் ஒருவர்.

அதற்கு பதிலளித்த சந்திரசேகர் அவர்கள் நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் என் அப்பா ஒரு சேனாதிபதி பிள்ளை நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறேன், கிறிஸ்தவ முறைப்படி பைபிளில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதில் ஒன்றை நீ உன்னை நேசித்த அளவிற்கு மற்றவரையும் நேசி உன் மதத்தை நேசிப்பதை போல் எல்லா மதத்தையும் நேசி அதுதான் உண்மையான கிறிஸ்தவன் என சொல்லி இருப்பார்கள்.

என் மதம் தான் பெரியது என மதம் பிடித்து அலைபவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல அதனால்தான் நான் சோபாவை ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் நான் நினைத்திருந்தால் அப்போதே எங்கள் கல்யாணத்தை சர்ச்சையில் பண்ணி இருக்கலாம் ஆனால் அதற்கு உடன்பாடு இல்லை இதுவரை என் மனைவியின் பூஜை அறையில் அவரின் சுதந்திரத்தை நாங்கள் யாரும் தடுத்தது கிடையாது.

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/177063513714277/

நடிகர் விஜய் அவர்கள் சங்கீதாவை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார் என பலர் கூறுகிறார்கள் நீங்க வேண்டும் என்றால் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு சான்றிதழ் இருக்கு அதை பார்த்தால் உங்களுக்கு தெரியும், நடிகர் விஜய் ஹிந்து முறைப்படி சங்கீதாவுக்கு தாலி கட்டி தான் திருமணம் நடந்தது, கிறிஸ்துவ முறைப்படி என்று கூறுவது எல்லாம் பொய், நான் சொல்வதற்கு ஆதாரம் தருகிறேன் அதேபோல் அவர்கள் சொல்வதற்கு ஆதாரம் தர வேண்டும் இல்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காட்டமாக பேசினார்.

இதற்கெல்லாம் விஜய் பதிலளித்துக் கொண்டிருந்தாள் படம் நடிக்க முடியாது கடைசிவரை பதில் அளித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் அதனால் அவர் இடத்திலிருந்து நான் பதில் அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

vijay pooja
vijay pooja

Leave a Comment