கத்தி திரைப்படத்தில் செல்பிபுள்ள பாடலை அடுத்து இந்த பாடலையும் விஜய் தான் பாடியுள்ளாராம் அதான் படம் ஹிட்டாகி விட்டது.!

0

தளபதி விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது,பாடல்கள் பாடுவது போன்ற பல விஷயங்களில் ஈடுபடுபவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் தளபதி விஜய் முருகதாஸ் கூட்டணியில் ஒரு சில திரைப்படங்களில் கைகோர்த்து மிகவும் அற்புதமாக நடித்திருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் முருகதாஸ் கூட்டணியில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் கத்தி இந்த திரைப்படம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார் என்பதும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் பயங்கரமாக இசையமைத்து வெற்றிக்கான வைத்திருப்பார் இதனை அடுத்து விஜய் இந்த திரைப்படத்தில் செல்பி புள்ள என்ற பாடலைப் பாடி ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றுவிட்டார் அதுமட்டுமல்லாமல் விஜய் இந்த பாடலை மட்டும் இந்த திரைப்படத்தில் பாட வில்லையாம் இன்னொரு பாடலும் பாடினார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆம் கத்தி திரைப்படத்தில் விஜய் வில்லனுக்கு தீம் மியூசிக்கில் ஜதி பாடி இருப்பார் என தகவல் கிடைத்துள்ளது ஆனால் இந்த தகவல் இவரது தீவிர ரசிகர்களுக்கு சேர்ந்து இருக்கலாம் ஆனால் இன்னும் பல ரசிகர்களுக்கு தெரியாத ஒன்று ஆகும்.

vijay
vijay

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய் இந்த திரைப்படத்தில் ஜதி பாடி இருப்பாரா என ஷாக்காகி இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இதேபோல் விஜய் இன்னும் எத்தனை திரைப்படத்தில் பாடி இருப்பார் என்பது நமக்குத் தெரியாத ஒன்று தான் ஆனால் அவர் பாடினால் படம் ஹிட்டாகி விடும் என்பது பலருக்கும்  தெரிந்த விஷயம்.