தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வெற்றி கண்டு வருகிறார் கடைசியாக இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் கூட 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
லியோ படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை அவ்வப்போது புகைப்படம் மூலம் படக்குழு சொல்லி வருகிறது. லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் படம் பண்ண இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் மறைந்த நடிகை சௌந்தர்யாவை அப்படியே காப்பியடித்துள்ளார் என பலரும் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். நடிகை சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை எடுத்தார். இவரது திறமை மற்றும் அழகை பார்த்து அப்பொழுது கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.
இவர் செய்யும் ஸ்டைல் ஒவ்வொன்றும் பிரமாதமாக இருக்கும் அப்படி ஒரு படத்தில் பபுள் கம்மை இரண்டு முறை வாயில் தூக்கி போடும் வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஸ்டைலை தான் விஜய் தனது படங்களில் அதிக முறை செய்துள்ளார் எனக் கூறி இதை பார்த்து தான் விஜய் காப்பியடிதாரா எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
Soundarya did it way before #Thalapathy 😁 pic.twitter.com/9OSVKN9EuG
— Hemanth Raj (@thehemanthraj) February 22, 2023