ஜவான் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்த “தளபதி விஜய்” – எத்தனை நாளைக்கு தெரியுமா.? வெளியே வந்த உண்மை செய்தி.!

0
vijay--
vijay--

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு படங்களை கொடுத்திருந்தாலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. இதுவரை இயக்குனர் அட்லீ ராஜா ராணி,  மெர்சல், தெறி, பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் பக்கம் படை எடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, தீபிகா படுகோன், நயன்தாரா, ராணா டகுபதி மற்றும் பல  பிரபலங்கள் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஜோராக போய்க் கொண்டிருக்கிறது.

ஜவான் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவம் கலந்த திரைப்படமாக உருவாவதால் இந்த படத்தில் ஆக்சன் சீங்கள் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட குழு படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டு இருந்தது.

படம் அடுத்த வருடம்  ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என  திட்ட வட்டமாக கூறியது இப்படி இருக்கா படத்தின் ஷூட்டிங் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்தன. இச்செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை..

vijay
vijay

இந்த நிலையில் வலைப்பேசி youtube சேனலில் இருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதாவது : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும்  ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறார் எனக்கூறி உள்ளனர் மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது இந்த படத்தில் விஜய் ஒரு நாள் மட்டுமே கால் சீட்  கொடுத்துள்ளாராம். ஜவான் படத்தில் ஒரு கமியோ ரோலில் விஜய் நடிப்பது உறுதியென சொல்லி உள்ளனர்.