அஜித்தை போல் ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய விஜய்.! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..

0

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் இன்று பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்தில் ரசிகர்களின் சந்திக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எனவே நடிகர் விஜய் சந்திப்பதற்காக ஆயிரங்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். எனவே தன்னுடைய ரசிகர்களுக்காக நடிகர் விஜய் சப்ரைஸ்சாக பிரியாணி தயார் செய்து இருந்தார்.

ரசிகர்கள் விஜய்க்காக காத்திருந்த நிலையில் தன்னை காண வந்த ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் முதலில் சாப்பிட சொன்ன விஜய் பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் பையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு இனோவா காரில் வந்தார். வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என மிகவும் ஸ்டைலாக அரசியல் கெட்டபில் வந்து இறங்கினார் விஜய்.

பிறகு ரசிகர்களுடன் கையை குலுக்கி விட்டு அலுவலகத்திற்கும் சென்ற விஜய் தனது ரசிகர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் மேலும் அவர்களுக்கு அறிவுரைகளையும் கூறினார். அதில் இரண்டு விஷயங்களை மிகவும் வலியுறுத்தி இருந்தார் அதாவது முதலில் குடும்பத்தில் இருப்பவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் தயவுசெய்து இனிமேல் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு இரண்டு மணி நேரத்தில் மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் பிறகு அங்கிருந்து கிளம்பினார். மீண்டும் ரசிகர்கள் வர அவர்களிடம் கையை குலுக்கி விட்டு பிறகு ரஞ்சிதமே பாடலில் ஒரு ஸ்டெப்பை போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இவர் அந்த வீடியோக்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கூட என்னுடைய பேனருக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள் அது ஒரு புண்ணியமான பொருள் எத்தனையோ பேர் ஒரு பால் பாக்கெட் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவ்வாறு பாலை வீணாக்குவது எனக்கு பிடிக்கவில்லை எனக்காக இது ஒன்று மட்டும்  செய்யுங்கள் என கூறியுள்ளார்.