அட்லீயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்..? ஆனா இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்னா மட்டும் தான் நடக்கும்..

இயக்குனர் அட்லீ இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு படங்களை இயக்கி இருந்தாலும் அந்த ஒவ்வொரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் தான் அந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி இயக்குனராக இருக்கிறார் இவர் கடைசியாக விஜய் வைத்து பிகில் என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதனை தொடர்ந்து இவர் பாலிவுட் பக்கம் தனது திசையை திரும்பினார் முதலாவதாக பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்னும் படத்தை இப்பொழுது விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் அந்த படம் ஒரு ராணுவத்தை மையமாகக் கொண்டு கதைகளும் உருவாகுவதாக கூறப்படுகிறது இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் நயன்தாரா, சானியா மல்கோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பல பாலிவுட் நட்சத்திர நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முதலில் மும்பை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் வெகுவிரைவிலேயே இந்த படக்குழு சென்னை வர இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் விஜய் தானாம்..

இது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம் ஜவான் படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என அட்லீ நினைத்துள்ளார் இதனால் விஜயை பார்த்து பத்து நாட்கள் கால்ஷீட் கேட்டு உள்ளார் அதற்கு விஜய் ஓகே சொல்லி இருந்தாலும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தால் மட்டுமே..

இது நடக்கும் என தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டாராம் அதற்கு அட்லீயும் சரி நாங்கள் படப்பிடிப்பை சென்னையில் நடத்திக் கொள்கிறோம் என கூறி சம்மதம் வாங்கியுள்ளார் இதனால் விஜய் ஜவான் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை தற்போது ரசிகர்களும் கொண்டாடிய தீர்த்து வருகின்றனர்.

Leave a Comment