பீஸ்ட் படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்.!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் அவர்கள் நடித்துள்ளார் மற்றும் யோகி பாபு போன்ற  காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர்.

என்னதான் இவர்கள் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், கோலமாவு கோகிலா, போல் ஓடவில்லை என்று தான் கூற வேண்டும். டாக்டர் படத்திற்கு முன்பு பீஸ்ட் படத்தை பற்றி அறிவிப்பு வெளியானது இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய விமானப்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்  ஆகியோர் பீஸ்ட் படத்தில் உள்ள ரபேள் விமான காட்சியை பதிவேற்றி விமர்சித்து வருகின்றனர்.

ரபேல் விமானத்துறை ஹெல்மெட் மற்றும் ஆக்ஜிசன் இல்லாமல் பறக்க முடியுமா. அதிலும் அதிவேகமாக செல்லும் போது சல்யூட் அடிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்த விமர்சனங்கள் எல்லை மீறியதால் விஜய் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்ந்து பாலிவுட்டில் இடம்பெற்ற லாஜிக் இல்லாத காட்சிகளை விஜய் ரசிகர்கள் சமூக தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். லாஜிக் பார்த்தல் படமே எடுக்க முடியாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version