தளபதி பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.!

ஈரோட்டில் நடிகர் விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி இன்று பிறந்த பச்சலம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிந்தும், ரத்ததானம் வழங்கியும் தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் வாழ்வில் குறித்த புத்தகங்களை விஜயின் ரசிகர்கள் வழங்கி நற்பணி உடன் விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

அதாவது விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரத்த தானமும் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை அடுத்து ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள காமராஜர் பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் ஆகியோர்களின் உரை எழுதப்பட்ட புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு இது தொடர்பாக செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பாலாஜி என்பவர் தங்களது தலைவர் அறிகுறிகளின் அடிப்படையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலைவர்களின் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளோம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களது கருத்துக்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதை எங்களுடைய நோக்கம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி கார்த்தி, ஈரோடு மாநகர செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் அருண், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகர தலைமை மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு மருத்துவமனையில் இன்று காலை மாநகர தலைவர் அக்கீம் தலைமையில் 50 பேர் ரத்த தானம் செய்தனர் மேலும் பெரிய மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்ய பூஜைகள் நடந்தது. இதனை அடுத்து ராஜாஜிபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Leave a Comment