தமிழ் சினிமாவில் உதவி என யார் கேட்டு வந்தாலும் எந்த ஒரு தயக்கமும் இன்றி உதவும் நடிகர்களில் இளையதளபதி விஜய்யும் ஒருவர், இவர் தனது ஆரம்ப காலத்திலிருந்து உதவி செய்து வருகிறார், மேலும் இவர் தனது நடிப்பாலும், அன்பாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள், அது மட்டுமல்லாமல் பல நல்ல உதவிகளையும் செய்து வருகிறார்கள், ரத்த தானம் , முதியோர்களுக்கு உணவு கொடுப்பது, அனாதை இல்லத்திற்கு சென்று உதவிகளை செய்வது என விஜய் பிறந்த நாளன்று ரசிகர்கள் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த வருடம் விஜய் பிறந்த நாளன்று கடலூரில் விலையில்லா விருந்தகம் என ஒரு நலதிட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் இந்த திட்டத்தில் வருடம் முழுவதும் இலவசமாக உணவு அளிக்கப்படும், இந்த திட்டம் விஜய்யின் நேரடி பார்வையில் இருக்கும் ஏனென்றால் விஜய்யும் இந்த திட்டத்திற்கு உதவுகிறாராம். இந்த திட்டத்திற்கு பல பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.