அஜித்தின் வலிமை படத்திற்காக விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்.! அட மாஸ் காட்டிடாங்களே

அஜித்தின் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை திரைப்படம் திரையரங்கில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. வலிமை திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கியுள்ளார் போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார். அதிகாலையிலேயே வலிமை திரைப்படத்தின் காட்சிகள் பல இடங்களில் தொடங்கப்பட்டது.

அஜித்தின் வலிமை திரைப்படம் ஆரம்பத்தில் படத்தின் டைட்டிலை எல்லாம் வெளியிட்டார்கள் அதன் பிறகு எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது படக்குழு. ஆனால் சமீபகாலமாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்கள் திகட்ட திகட்ட படக்குழு வெளியிட்டு வந்தார்கள்.

வலிமை திரைப்படத்தின் முதல்பாதி முடிவடைந்த நிலையில் பல ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் தல அஜித் திரைப்படம் வெளியானால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். பேனர் வைப்பது, பாலாபிஷேகம், மாலை என அமர்க்களம் படுத்து விடுவார்கள்.

அந்த வகையில் மதுரை ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளார்கள் இந்த போஸ்டர் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வைத்துள்ளார்கள். அதாவது விஜய் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை வரவேற்று இந்த பேனரை வைத்துள்ளார்கள்.

விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் எப்படி அடித்துக் கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக இவர்கள் அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு இருவரும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் என்றே கூறலாம் ஏனென்றால் வலிமை திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டரைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சரியம் என வியந்து  வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதுபோல் இருவரும் ஒன்றாக இருந்தால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

valimai ajith
valimai ajith

Leave a Comment