“ஜெயிலர்” படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே விஜய் ரசிகர்கள் தான்.. இதோட முடிய போறது இல்ல.. பிரபலம் சொன்ன தகவல்

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று..

வசூலில் ருத்ரதாண்டவம் அடி வருகிறது நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஜெயிலர் படம் ஹிட் அடிக்க காரணமே விஜய் ரசிகர்கள் எனக் கூறி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ஜெயிலர் படத்தை உசிப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் எங்களுக்கு தான் என்று சொல்லி ரஜினி இடமிருந்து சூப்பர் ஸ்டார் படத்தை பிடுங்குவதற்கு சதி செய்தார்கள். இந்த சதியை முறியடிக்க வீறு கொண்டு எழுந்த ரஜினி ரசிகர்கள்..

ரஜினி இரண்டு வருடம் நடிக்கவில்லை என்றால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா இப்பார் என் தலைவன் வந்து விட்டான் என்று கூறி ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படம் வெளியாகி நான்கு நாட்களிலும் அனைத்து திரையரங்களிலும் டிக்கெட் புல் தான் இன்று திங்கள் கிழமை என்பதால் ஒரு சில சீட்டுகள் இருக்கின்றன.

நாளை ஒரு முறை என்பதால் வழக்கம் போல ஜெயிலர் படத்தின் டிக்கெட் புலாகும் பலரும் இப்பொழுதே முன் பதிவு செய்து உள்ளனர். ஜெயிலர் படத்தை வெற்றி படமாக மாற்றியது விஜய் ரசிகர்கள் தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Leave a Comment

Exit mobile version