ஒட்டு மொத்த முன்னணி நடிகர்களையும் ஓரம்கட்டும் விஜய் தேவாரகொண்டா.! எதில் தெரியுமா.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருடைய நடிப்புத் திறமையினால் பெரும்பாலான இளம் பெண்களையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இவர் 2016ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான பெல்லி சூப்புலு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றார்.

இவர் தற்போது பிரபல ஹீரோ என்றாலும் இவர் முதலில் காமெடி நடிகராக தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து தற்போது திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது உள்ள பல நடிகர், நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் விஜய்தேவரகொண்டாவும் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா பாலோவர் 8 மில்லியன் தொட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது உள்ள தெலுங்கு,கன்னடம்,தமிழ் ஆகியது நடிகர், நடிகைகள் இவ்வளவு அதிக பாலோசரை எவராலும் பெற்றிருக்க முடியாது எனவே விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version