தனது அடுத்த படத்தில் மூன்று கதாநாயகிகளுடன் டூயட் பாடும் விஜய்.! படத்தின் டைட்டில் இதுதான்.

0

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் விஜய் தேவாரகொண்டா, இதனை தொடர்ந்து நோட்டா டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார், அதேபோல் டியர் காம்ரேட் திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, இந்த நிலையில் தனது ஒன்பதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நாயகியாக மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் ராசி கண்ணா கேத்தரின்தெரசா ஆகியோர்கள், இந்த நிலையில் படத்தின் டைட்டிலை அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார்கள், படத்திற்கு வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என வைத்திருக்கிறார்கள்.

படத்தை கிரியேட்டிவ் கமர்சியல் என்ற நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் ஆக மட்டுமல்லாமல் ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது, இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக மூன்று நாயகிகள் நடித்து வருகிறார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்திருந்தார்கள்.

இருப்பினும் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருவதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கேத்தரின்தெரசாவுடன் விஜய்தேவரகொண்டா ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஆந்திராவில் உள்ள ஸ்டூடியோவில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இந்த செட்டில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.