ஒரு நாளில் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்த விஜய்.! வைரலாகும் வீடியோ

விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களை பெற்றுள்ளார், இவர் முதலில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார், அந்த திரைப்படத்தில் இருந்து தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் முதல் திரைப்படமே லவ் ரொமான்ஸ் திரைப்படமாகும் இதனை அடுத்து இவர் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் லவ் ரொமான்ஸ் திரைப்படம்தான், ஆனாலும் ரசிகர்கள் இவருக்கு பெருமளவு ஆதரவு கொடுத்து வருகிறார்கள், இந்த நிலையில் இனி லவ் கதைகளில் நடிக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ் திரைப்படம் வெளியாக இருக்கிறது, இந்த திரைப்படத்தில் ராசி கண்ணா, கேத்தரின், ஐஸ்வர்யா ராஜேஷ், சபெல்லி லெட்டி என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது மேலும் 246k லைக்ஸ் பெற்றுள்ளது தற்போது வரை. இதொ அந்த ட்ரைலர்.

Leave a Comment