இரவு பார்ட்டியில் நடனமாடிய விஜய்..! சேர்ந்து ஆட்டம் போட்ட பிரபல இயக்குனர் – இதுவரை யாரும் பார்த்திடாத வீடியோ.

திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் திறமையான இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சவிஜய்யை சொல்லவே வேண்டாம் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார்.

இவருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பது வழக்கம்..  அந்த வகையில் இயக்குனர் அட்லீயுடன் இவர் இதுவரை மூன்று முறை கைகோர்த்துள்ளார் அந்த மூன்று படங்களுமே வெற்றி படங்கள் தான். நான்காவது முறையாக கூட இந்தக் கூட்டணி இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் விஜயோ தொடர்ந்து அட்லீவுடன் கைகோர்த்தால் அது சிறப்பாக இருக்காது எனக்கூறி சிறு இடைவெளிக்கு பிறகு  கைகோர்த்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறாராம் தற்போது அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ன படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தில் கூட விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மறுபக்கம் தெலுங்கு பட இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காரணம் இயக்குனருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் வெகு விரைவிலேயே இயக்குனர் அட்லீயுடன் கைகோர்ப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நண்பன் படத்தின் வெற்றி விழாவின் போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் அப்பொழுது உதவி இயக்குனராக   இருந்த  அட்லீயும் சேர்ந்து நடனமாடி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..

Leave a Comment