அட விஜய் மீரா மிதுனை அப்பட்டமாக காப்பி அடித்து விட்டாரா.? மீரா மிதுன் வெளியிட்ட பதிவை பாருங்கள்.!

பிகில் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன். சாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்க்கி, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, சுனில் ரெட்டி, பெருமாள் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று லீலா பேலஸில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது, இந்தநிலைக்கு காரணம் வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளே பயந்து இருக்கிறது, அதனால் பல இடங்களில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, இசை வெளியீட்டு விழா முடிவடைந்த நிலையில் ரசிகர்களின், சந்தோசத்தை கெடுக்கும் விதமாக சர்ச்சையை எப்பொழுதும் உருவாக்கும் நாயகி மீரா மிதுன் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை போட்டியாளராக இருந்தவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பல சர்ச்சை பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்த நிலையில் தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னை பார்த்து தான் காப்பி அடிக்கப்பட்டது என புதிய சர்ச்சையை கிளப்பி விட்டார். மாஸ்டர் படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது, இதில் இரண்டாவது போஸ்டரில் விஜய் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார், தற்பொழுது மீரா மிதுன் அதே போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிங்ஃபிஷர் டாப் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது.

எனவே இதற்கான பதில் கிடைத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார் இவரின் பதிவு ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. மீரா மிதுன் இதுபோல் சர்ச்சையை ஏற்படுத்துவது புதிதல்ல, ஆனால் இந்த முறை கொஞ்சம் விஜய் ரசிகர்களை சீண்டியது அதிகம் தான்.

https://twitter.com/meera_mitun/status/1239242539258884096

Leave a Comment