காக்க வைத்து அல்வா கொடுத்த விஜய்.! கை கொடுத்து வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்.! இனிதான் இருக்கு ஆட்டமே…

0
vijay-sivakarthikeyan
vijay-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் அஜித் எத்தனையோ இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்த வகையில் தீனா திரைப்படத்தின் மூலம் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அவர் இயக்கிய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததால் உடனே மிகப்பெரிய நடிகர் ஆன விஜயகாந்த் திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது விஜயகாந்த்தை வைத்து ரமணா என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றி வாகை சூடினார்.

தான் இயக்கிய ஒரு சில திரைப்படங்களிலேயே டாப் இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார் இதனை தொடர்ந்து விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது அந்த அளவு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படமும் கூட.

இந்த திரைப்படத்திலிருந்து விஜய்யுடன் கத்தி, சர்க்கார்   ஆகிய திரைப்படங்களில் ஏ ஆர் முருகதாஸ் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து தர்பார் என்ற திரைப்படத்தை இயக்கினார் ஆனால் இந்த திரைப்படம் பெரிதளவு வெற்றி  ஆகவில்லை. அதனால் சரிக்கு இறங்கிய தனது  மார்க்கெட்டை எப்படியாவது உயர்த்த வேண்டும் என விஜய் திரைப்படத்தை இயக்குவதற்காக காத்துக் கொண்டிருந்தார்.

எப்படியாவது தனது மார்க்கெட்டை உயர்த்தி விட வேண்டும் என விஜய்யை வைத்து இயக்குவதற்கு முடிவு செய்தார் அதேபோல் விஜய் பலமுறை முருகதாஸ் அவர்களிடம் கதையை கேட்டுள்ளார் பொறுத்திருங்கள் நாம பண்ணலாம் என காக்க வைத்தார் அதை நம்பி ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் காத்து இருக்கின்றார் ஆனால் அவருக்கு ஏமாற்றம் தான் கடைசியில் மிஞ்சியது.

இதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் பல முன்னணி நடிகர்களுடன் கதை சொல்லியும் எந்த ஒரு முன்னணி நடிகரும் கால்ஷீட் கொடுக்க முன்வரவில்லை அப்படி இருக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஓகே கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது விரைவில் இவர்களின் கூட்டணி இணைய இருக்கிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.

முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்க்ஷன் ஹீரோவாக இறங்க இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்தாலும்   அந்த முன்னணி நடிகர்கள் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டுவது மிகப்பெரிய வருத்தம் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது.

இந்த நிலையில் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புதிய கூட்டணி ரமணா, துப்பாக்கி, தீனா ஆகிய திரைப்படங்களைப் போன்று ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.