“வாரிசு” படத்தின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய விஜய்.. வைரலாகும் பார்ட்டி புகைப்படம்

0
vijay
vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்து தனது 66வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்தார். பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாகிய வெற்றி நடை கண்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 100 கோடி மேல் வசூல் அள்ளியது. உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் படம் வசூல் செய்ததாக தகவல்கள் வெளி வருகின்றன. வாரிசு படத்தை எதிர்த்து வெளிவந்த அஜித்தின் துணிவு படமும் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று  வசூல் குவித்து வருகிறது.

ஆனால் அஜித்தின் துணிவு படக்குழு இதை பெருசாக கொண்டாடவில்லை. ஆனால் மறுபக்கம் விஜயின் வாரிசு படக்குழு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறது மேலும் படத்தின் வெற்றியை ஏற்கனவே கொண்டாடிய நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் மீண்டும் வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

இந்த பார்ட்டியில் தயாரிப்பாளர்  தில் ராஜு, தளபதி விஜய், நடிகர் ஷாம், இயக்குனர் வம்சி, தமன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்போது பிரம்மாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர் அந்த கேக்கில் வாரிசு, தளபதி விஜய் என பெயர்கள் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vijay
vijay

பின் தளபதி விஜய் தயாரிப்பாளர் தில் ராஜூக்கு கேக்கை ஊட்டினார் அதனைத் தொடர்ந்து இயக்குனர் வம்சி தளபதி விஜய்க்கு கேக்கை ஊட்டினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் லைக், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..

vijay
vijay
vijay
vijay