விஜய்யின் பிகில் ட்ரைலர் பற்றி ட்வீட் போட்ட ராஜபக்சே மகன்.! என்ன சொன்னார் தெரியுமா?

0
bigil trailar
bigil trailar

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது, மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக கோலாகலமாக நடைபெற்றது.

அந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பொதுவான கருத்துக்களை பேசினார் ஆனால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பிகில் திரைப்படத்தின் இசை ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது படக்குழு.

அதேபோல் ட்ரைலரை வெளியிட்டார்கள் படக்குழு விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் இலங்கை அரசியல் தலைவர் ராஜபக்சேவும் ஒருவர்.

நேற்று வெளிவந்த விஜய்யின் பிகில் பட ட்ரைலர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். “இந்த மாத இறுதியில் வரும் பிகில் படத்திற்காக அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக பிகில் இருக்கும் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.