லீக் ஆனா பிகில் படலை மட்டமாக கிண்டல் செய்த கஸ்தூரி விஜய் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன வச்சி செஞ்சிடாங்க.!

0
kasturi
kasturi

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது, படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியிட்டார்கள்.

மேலும் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் அப்பா மற்றும் மகனாக இதில் மகன் பெயர் மைக்கேல் என தெரியவந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக் மூலம். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

நேற்று பிகில் திரைப்படத்தின் சிங்கம் பெண்ணே பாடல் இணையதளத்தில் லீக் ஆகி வைரலானது இந்த பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது, இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த பாடலை பார்த்து “லீக் ஆன என்ன ஏற்கனவே கேட்ட பாட்டு தானே புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்து இருக்காரு நல்லாத்தான் இருக்கு என கிண்டலாக பதிவிட்டுள்ளார், இதற்கு விஜய் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.. இதோ அவர்களின் பதிவு