பிகில் பட டீஸர் ரிலீஸ் தேதி இதுதான்.! செம மாஸ் அப்டேட் இதோ.!

0
bigil
bigil

விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா-மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரளாகியது.

அதுமட்டுமில்லாமல் யூடியூபில் சில சாதனைகளையும் படைத்தது, இந்த நிலையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் யூ டியூபில் இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது அதேபோல் படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல் வருகின்ற 19ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.