பிகில் இந்த திரைப்படத்தின் ரீமேக் உண்மையை கூறிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

0

விஜய் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படத்தின் டிரைலரை பார்த்த பல சினிமா பிரபலங்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களை கூறினார்கள், இந்த நிலையில் டிரைலர் வரும் ஒரு காட்சி சக்தே படத்தை போலவே இருக்கிறது என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, அதனால் சக்தே படத்தின் ரீமேக்கை படக்குழு வாங்கி பிகில் படம் எடுக்கிறார்கள் என ஒரு தகவல் பரவியது.

அதுமட்டுமில்லாமல் ட்ரெய்லரை மோசமாகவும் ட்ரோல் செய்து வந்தார்கள், இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியில் சத்தே படத்தின் ரீமேக்கை நாங்கள் வாங்கவில்லை, அப்படி வந்த செய்தி அனைத்தும் வதந்தியே எனக் கூறினார்.