பிகில் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

0

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் இணைந்துள்ளார்,இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவித்திருந்தார்கள் படக்குழு. இந்த நிலையில் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த கதையில் விஜய் ஒரு கால்பந்து கோச்சராக நடித்துள்ளார் மேலும் படத்தில் விஜய் இரண்டு ரோலில் நடித்துள்ளார், ஒரு விஜய்யின் ரோல் மைக்கேல் எனவும் மற்றொரு விஜய்யின் ராயப்பன் எனவும் ஏற்கனவே தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது இப்படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் படக்குழு. மேலும் படத்தின் சென்சார் ரிப்போர்ட் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரம் வெளியாகும் என தெரிகிறது அது மட்டுமில்லாமல் படத்தின் டப்பிங் விரைவில் தொடங்க இருக்கிறது எனவும் மேலும் இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது என அட்லிக்கு வாழ்த்து கூறியுள்ளார்கள் படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம்.