சென்னை பாக்ஸ் ஆபிஸ்சை அதிரவைத்த பிகில்.! அதுவும் மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா.!

0
bigil
bigil

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகள் படத்தில் நடித்து உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது, இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது, மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை பற்றி பல கருத்துக்கள் வெளியானாலும் உலகம் முழுவதும் வசூலில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் தெரிய வந்துள்ளது கடந்த 3 நாட்களில் 5.26 கோடி வரை சென்னையில் வசூல் செய்துள்ளது, மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால், பெரிய அளவில் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த வாரத்திற்குள் பிகில் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி கிளப்பில் இந்த திரைப்படம் இணைந்து விடும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.