தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் பொதுமேடையில் எது பேசினாலும் அதை அரசியலாக்கி விடுகிறார்கள் மீடியாக்கள். இதனால் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறி விட்டார் விஜய், ஆளுங்கட்சியினர் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிகிறது.
மேலும் விஜய் படம் எது வந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு வில்லங்கம் வந்து விடுகிறது அதனால் விஜயை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் சோதனையாக மாறிவிடுகிறது. அந்தக் கதைதான் தற்பொழுது bigil திரைப்படத்திற்கும் நடந்துள்ளது.
பிகில் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது,இது வெளியான நேரத்தில் பிகில் திரைப்படத்தின் கதை என்னுடையது என அந்த படத்திற்கு தடை கோரி செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார், இந்த வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
அது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கிவிட்டதால் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா.? ஆகாதா? என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள் பலரும். பிகில் திரைப்படத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் 180 கோடி போட்ட தயாரிப்பு நிறுவனம் கதி அதோகதிதான்.