இணையதளத்தில் வைரலாகும் பிஸ்ட் திரைப்படத்தின் அரபி குத்து பாடலின் sync வீடியோ.! அதகளம் பண்ணும் ரசிகர்கள்

தளபதி விஜய் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நெல்சன் திலீப்குமார் இதற்கு முன்பு டாக்டர் கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதனால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை கலாநிதி மாறன் தான் தயாரித்து வருகிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார் அதனால் படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாக இருக்கிறது இதற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடலான அரபி குத்து பாடலை வெளியிட்டார்கள்.

இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த பாடலை பிரபலமாக்கி வருகிறார்கள் விஜய் மற்றும் பூஜா கெக்டேவின் நடனத்தை  sync செய்து வீடியோவை உருவாக்கி அதனை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அந்த வீடியோ படுவேகமாக வைரலாகி வருகிறது.

https://twitter.com/Friday56580240/status/1493457638452957184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1493457638452957184%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Farabic-kuthu-song-sync-videos-1645015150

இதோ ஒரு சில ரசிகர்கள் பதிவிட்ட வீடியோவை இங்கே காணலாம். இந்த வீடியோவை அனைத்தும் பாடலுக்கும் கனக்கச்சிதமாக பொருந்துகிறது.

https://twitter.com/Aye_Sinamikaa/status/1493223839471661059?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1493223839471661059%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Farabic-kuthu-song-sync-videos-1645015150

Leave a Comment

Exit mobile version