ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்த விஜய்.! சந்தோஷத்தில் தூள்ளி குதிக்கும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்பொழுது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே அனைவரும் முடங்கிக் கிடக்கும் நிலையில் பல சினிமா பிரபலங்களை பற்றிய தெரியாத பல விஷயங்கள் தெரிய வந்தது அந்த வகையில் விஜய் பற்றி தெரியாத பல விஷயங்களை நாம் அனைவரும் தெரிந்து கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் கானராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர் இத்திரைப்படத்தை அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னகுமார் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது ஆனால் தற்போதெல்லாம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

இப்படத்தின் பல அப்டேட்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்துவந்தது ஷூட்டிங்கின் கடைசி நாளன்று விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து தேங்க்யூ நெய்வேலி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இப்புகைப்படம் பல நாட்களாக வைரலாகி வந்த நிலையில் தற்போது 356.8 லட்சம் பேர் பகிர்ந்து உள்ளார்கள் என்றும் 356.4 லட்சம் பேர் லைக் போட்டு உள்ளார்கள் என்றும் உலகம் முழுவதும் இப்புகைப்படம் பிரபலம் அடைந்து விட்டது என்று தெரியவந்துள்ளது எனவே விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.