24 மணி நேரத்தில் சூர்யாவை பின் தள்ளிய விஜய்.! அதுவும் இப்பேற்பட்ட விஷயத்திலா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்பொழுது விறுவிறுப்பாக நடித்து வரும் திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.மேலும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது.

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.மேலும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்துவரும் நடிகர் தான் சூர்யா இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.இதற்கிடையில் சூர்யா பல இயக்குனர்களுடன் கூட்டணி பிஸியாக நடித்து வருகிறார் இந்நிலையில் சூர்யாவை விஜய் பின்னுக்கு தள்ளிய சம்பவம் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கினார் மேலும் இதில் இவர் தொடங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 4.5 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றார் இதுவரை விஜய் 6.7 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

vijay
vijay

ஆனால் நடிகர் சூர்யா 6.6 மில்லியன் பின் தொடர்வர்களை மட்டுமே கொண்டுள்ளார் இதனால் விஜய் அதிகம் என்பதை அவர்களது ரசிகர்கள் புகைப்படங்கள் மூலம் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

surya
surya

மேலும் இந்த கணக்கை துவங்கிய 24 மணி நேரத்தில் விஜய் வெறும் 4.5 மில்லியன் பின் தொடர்பவர்களை மட்டுமே பெற்றாராம். இந்நிலையில் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment