விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய தனுஷ்.! அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்.

0

தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முதன்முதலாக முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு தமிழில் பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வில்லை அது மட்டுமில்லாமல் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இந்த நிலையில்  தற்பொழுது விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதேபோல் மக்கள் மற்றும் ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பூஜா ஹக்டே தளபதி திரைப்படத்தில் கமிட்டானதிலிருந்து சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பூஜா அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் ஒரு திரைப்படத்திலும் பவன்கல்யாண் அவர்களுடன் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி பலபடத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழில் மீண்டும் முன்னணி நடிகரான தனுஷ் அவர்களுடன் பெயரிடாத படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தளபதியுடன் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் முடிந்த பிறகு இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் பூஜா ஹெக்டே அதற்குள் அப்டேட் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

தனுஷ் பட வாய்ப்பு உறுதியானால் இவருக்கு இன்னும் பட வாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருபதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.