விஜயின் பத்ரி திரைப்படத்தில் நடித்துள்ள சிறுத்தை சிவா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா இவர் முதன்முதலில் தெலுங்கில்2008 ஆம் ஆண்டு சவுரியம், சங்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அதன்பிறகு 2011ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர். சிறுத்தை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கினார். இப்படி தொடர்ச்சியாக படங்களை ஹிட் கொடுத்து வருவதால் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை விரைவில் அடைந்துவிட்டார்.

அதேபோல் இவர் அதிக திரைப்படங்களை இயக்கியது அஜித்தை வைத்து தான் இந்த நிலையில் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது  அப்படி இருக்கும் வகையில் சிறுத்தை சிவா நடிகராக நடித்துள்ள திரைப்படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர் ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது விஜய்யின் பத்ரி திரைப்படம் தான் 2001 ஆம் ஆண்டு அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பத்திரி. விஜய்க்கு ஹிட் கொடுத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று இந்த திரைப்படத்தில் பூமிகா விஜய் பூபேந்திர சிங்கும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய் அண்ணனுக்காக குத்துச்சண்டை வீரராக மாறி இருப்பார் இந்த திரைப்படத்தின் இறுதியில் நடிகர் விஜய் ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுவார் அவரை இறக்கி விட்டதும் விஜயின் பயிற்சியாளர் ஜான் வேறு ஒரு நபரை கையை காட்டி அவரை தூக்கிக் கொண்டு ஓட சொல்வார் அப்பொழுது கையெடுத்துக் கும்பிடுவார்கள் அந்த காட்சிகளை சிறுத்தை சிவா நடித்துள்ளார்.

அதேபோல் மனதை திருடிவிட்டாய் படத்திலும் நடித்திருப்பார்.

https://youtu.be/V7wrZJ_eeZ4

Leave a Comment