எஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் !! வைரலாகும் வீடியோ.! ரசிகர்கள் நெகழ்ச்சி.

0

vijay at spb funeral video viral: பிரபல முன்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு குணமாகி மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று அவர் உயிர் பிரிந்தது. இது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகம் என அனைவருக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னும் யாராலும் இவர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை அந்த அளவுக்கு அவரின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வருத்தத்திற்குரியது. இந்நிலையில் இன்று இறுதிசடங்கில் அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களும் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அங்கு நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளு முள்ளில் அவரது ரசிகர் ஒருவர் தடுமாறிக் கீழே விழுந்தார் அவரின் காலணியை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.