செப்.28ல் ரிலீசாக இருந்த 5 தமிழ் படங்கள்.! போட்டியிலிருந்து விலகிக் கொண்ட மாஸ் நடிகரின் திரைப்படம்..

Tamil Movies: வாரம் தோறும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இவ்வாறு இந்த வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி 5 திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென ஒரு திரைப்படம் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28ஆம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன், ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2, சித்தார்த் நடித்த சித்தா, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இந்த 5 முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருவதனால் யாருடைய திரைப்படம் வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் தற்பொழுது இவர்களுடன் போட்டி போட்டால் கண்டிப்பாக வசூல் குறையும் என்ற காரணத்தினால் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.

அப்படி தற்பொழுது வெளியாக இருக்கும் தகவலின் படி அக்டோபர் 6ம் தேதி அன்று விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து மாஸ் நடிகரான விஜய்யின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

எனவே இதன் காரணமாக ரத்தம் திரைப்படம் ரிலீசான நாளிலிருந்து வெறும் 13 நாட்கள் மட்டுமே ஓட வாய்ப்பு உள்ளது. ரத்தம் படத்தினை சி.எஸ் அமுதன் இயக்க, கண்ணன் இசையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.