ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன் மிரட்டலாக வெளியானது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 டிரெய்லர்.!

vijay-antony
vijay-antony

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி விட்டு தற்பொழுது கதாநாயகனாக நடித்து வரும் பிரபலம் தான் விஜய் ஆண்டனி இவர் இசையமைத்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.

அவ்வாறு இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ச்சியாக தற்பொழுது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இன்று வரை திகழ்ந்து வருகிறது குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் சென்டிமென்ட் பாடல் மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது.இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

என பல சினிமா பிரபலங்களும் கூறிவரும் நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரெய்லரை தனது சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் ஆண்டனி பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இவரே இயக்கியும் நடித்தும் உள்ளதால் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது இந்த படம் கண்டிப்பாக பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுக்கும் என ஒரு சில ரசிகர்கள் தற்பொழுதே கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.