மிரட்டலாக வெளியான விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ட்ரைலர்.!

0

வித்தியாசமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்தான் விஜய் ஆண்டனி இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன்,அண்ணாதுரை,சலீம்,காலி போன்ற பல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் கோடியில் ஒருவன் திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி இந்த படத்திற்காக நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது ஆம் இதில் டியூசன் மாஸ்டர் அரசியலில் இறங்குவது போல ட்ரைலர் வேற லெவலில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனி வேற லெவலில் நடித்துள்ளார் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த ட்ரைலரை சமூக வலைதள பக்கங்களில் இவரது ரசிகர்கள் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.