செவ்வாய் கிரகத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என நினைத்தோம் ஆனால் ஒரு வைரஸ் உலகத்தையே. வேதனையுடன் பிரபலம் போட்ட ட்வீட்

vijay antony
vijay antony

சீனாவிலும் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இந்த பொறுமை வைரஸ் பரவியது இது அப்படியே படிப்படியாக பரவி அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 144 கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்த கொரோனா வைரஸ்கள் நம்மளை தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சினிமா பிரபலங்கள் மற்றும் பல பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அவர் அதில் கூறியுள்ளதாவது.

வணக்கம் நண்பர்களே நிலாவிற்கு நாம் ராக்கெட் விட்டோம் நிலவில் சென்று வாழலாம் என நினைத்தோம், செவ்வாய் கிரகத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என நினைத்தோம், மனுஷன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் மனுஷனுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என நினைத்தோம் ஆனால் ஒரு வைரஸ் உலகத்தையே வீட்டில் உட்கார வைத்து விட்டது எனக் கூறி மக்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.