ஒரே வருடத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த விஜய் ஆண்டனி.! கடைசியில் மகளையும் இழந்த சோகம்..

vijay antony 2
vijay antony 2

Vijay Antony: விஜய் ஆண்டனி கடந்த ஒரு வருடத்தில் பல துன்பங்களை அனுபவித்த நிலையில் கடைசியாக தனது மகளையும் இழந்திருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் அண்ணனின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். விஜய் ஆண்டனி சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை உணர்த்தும் வகையில் அமையும் திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் கலந்து கொள்ளும் அனைத்து பேட்டிகளிலும் ரசிகர்களுக்கு தேவையான கருத்துக்களை கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் கூட பள்ளி மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் மன அழுத்தம் தான் அவர்களை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என ஏராளமான தகவல்களை பகிர்ந்தார்.

ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியின் மகளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமான விஜய் ஆண்டனி பிறகு ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்தார்.

அப்படி இவருடைய தனித்துவமான கதை, திரைக்கதை மற்றும் தலைப்புகளுடன் வெளியாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இவருடைய நடிப்பில் இந்த வருடம் வெளியான பிச்சைக்காரன் 2 கலவை விமர்சனத்தை பெற்றது.

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் பொழுது கடந்த ஜனவரி மாதம் விபத்து ஏற்பட்ட விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே இதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் தான் குணமானார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நடத்திய மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியின் குளறுபடிக்கு காரணம் விஜய் ஆண்டனி தான் என்று சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை எனவே கடுப்பான விஜய் ஆண்டனி இது தவறான தகவல் கண்டிப்பாக இந்த தகவலை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் நஷ்ட ஈடாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த இசையமைப்பாளர்களுக்கு நன்கொடையாக கொடுக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில் தன்னுடைய மகளை இழந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. நேற்று விநாயகர் கொண்டாடப்பட்ட நிலையில் மாலை முதல் சோகமாக இருந்து வந்த இவருடைய மகள் மீரா என்று செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு வருடத்தில் விஜய் ஆண்டனி பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் கடைசியாக இவருடைய மகளையும் இழந்திருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.