படத்தில் நடிப்பதற்கு முன்பு பார்ட் டைம் ஜாப் பார்த்து 600 ரூபாய் சம்பாதித்த விஜய் ஆண்டனி.! என்ன வேலை பார்த்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.இவர் நடிப்பில் கடைசியாக கொலைகாரன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் தற்போது இசையமைப்பாளராகவும்,நடிகராகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சுக்ரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைதொடர்ந்து பைடு,பந்தயம், நினைத்தாலே இனிக்கும், உத்தமபுத்திரன், அங்காடி தெரு போன்ற படங்களில் இசையமைப்பாளராகவும்,நடிகராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து திரையுலகில் தற்போது ஒரு அங்கமாக இருக்கிறார். இவர் ஒரு பேட்டியில் தன் அம்மாவிடம் படிக்கப் போவதாக ஊரை விட்டு சென்னைக்கு வந்ததாகவும்.

சென்னை வந்த பிறகு தன் படிப்பையும் பார்த்துக்கொண்டே பார்ட் டைம் ஜாப்பையும் செய்துவந்தார். இதன் மூலம் தனது கனவு என்னவாக வேண்டுமென்றே தொடர்ந்து  வேலை செய்து வந்துள்ளார்.

தன் நண்பர் ஒருவரின் மூலம் தான் சவுண்ட் இன்ஜினியர் வேலைக்கு சேர்ந்ததாகவும் இதன் மூலம் முதலில் நான் வாங்கின சம்பளம் 600 ரூபாய் என்றும் கூறியிருந்தார். பிறகு படிப்பை முடித்துவிட்டு ஸ்டூடியோவில் இரவு 2 மணி வரையும் வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் தூங்குவேன் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு இசையின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் தனது விடா முயற்சியின் காரணமாக முழுவதுமாக கற்றுக் கொண்டார். சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து அனைத்து இசைக் கருவிகளையும் வாங்கி வைத்து தான் நான் தற்பொழுது நல்ல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment